இலங்கையை பிரார்த்தனையின் மூலமாகக் கட்டியெழுப்ப வேண்டும் - போதகர் சகோ.ஜெயம் சாரங்கபாணி.
ஆன்மீகம் ஒன்றே மனிதனை பிரிவினை இல்லாதபடிக்கு பலனைக் கொடுப்பது. இறைவன் எம் மீது அன்பாய் இருப்பது போன்று நாம் பிறர்மீதும் அன்பாய் இருக்க வேண்டும். இந்த நாட்டுக்கு அன்பு தேவை. கடவுளினுடைய அன்பு வருமாயும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வோம். இந்த நாட்டில் பிரிவினை வராது. இலங்கை என்ற ஒரு கொடிக்கு கீழ் அனைவரும் வந்து இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். வீழ்ந்து போன இலங்கையை பிரார்த்தனையின் மூலமாகக் கட்டியெழுப்ப வேண்டும்.
என மிஸ்பா ஜெப மிஷனரி ஊழியத்தின் ஸ்தாபகரும், போதகரும், சுவிசேஷகருமான சகோ.ஜெயம் சாரங்கபாணி அவர்கள் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள் கிழக்கு ஊடக மன்னறத்தில் ஞாயிற்றுக்கிழமை(30.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;….
நான்கு இன மக்கள் மூன்று பாசை பேசுகின்றோம். சிங்கள மக்கள் இந்த இலங்கையை அவர்கள் ஆளவேண்டும் என்று விரும்புகின்றார்கள். அவர்களுடன் நாம் ஒன்றிணைந்து கடவுளின் பிள்ளைகளாக சமாதனத்துடன் எங்கள் பிரதேசங்களில் நாங்கள் அதிகாரத்துடன் வாழ பிராhத்தனை செய்;கின்றோம். இஸ்லாமிய மக்களும் எம்சகோதரர்களே. அனைவரும் சகோதரர்களாக இருந்தால் இலங்கை கட்டியெழுப்பப்படும்.
இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே மூவின மக்களும் பிட்டும் தேங்காய்ப் பூவையும் போல இணைந்து வாழ்கின்றார்கள். நாங்கள் பிரிந்துவழ விரும்பவில்லை. இதற்காகவே இறைவனுடைய தூதை நாங்கள் கொண்டு வருகின்றோம். இறைவல்லமையுடன் இந்த தேசம் கட்டப்பட வேண்டும். விசேடமாக மட்டக்களப்பை கடவுள் ஆசீர்வதிக்க இருக்;கின்றார். நிச்சயம் கிழக்கு மாகாணம் கடவுளின் ஆசீர்வாதத்திற்கு உட்பட்டே ஆகும். தென்னிலங்கையும், வடபகுதியும் இறைவன் பக்கம் முழுமையாகத் திரும்ப வேண்டும். எங்கள் மூலம் கடவுள் இந்த இலங்கை முழுவதும் சமாதானத் தூதை விதைக்கின்றார்.
நாங்கள் இஸ்லாமியர்களை நம்புகின்றோம். இஸ்லாமியர்களும் எங்களை நம்ப வேண்டும். பிரிந்து செயற்படக்கூடாது. அதே போன்று சிங்கள மக்களும் எங்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
விசேடமாக இந்த நாட்டிலே ஊடகவியலாளர்கள் பாதுகாக்;கப்பட வேண்டும். எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்டும் இருக்கின்றார்கள். எத்தனையோ பேர் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தத் தூதைக் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் செல்லுகின்றார். ஊடகவியலாளர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்தனையிலே ஈடுபடுவோம்.
பிரார்த்தனையின் மூலம் அனைத்த இனங்களையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வர வேண்டும். நதியானது இறுதியில் சமுத்திரத்தை அடைந்தே ஆக வேண்டும். கிழக்கு வடக்கு தெற்கு என்றில்லாமல் ஒரே சமுத்திரத்தில் நாம் சேர்வதாக இறைவன் ஒவ்வொருவரையும் தேவசாயலாகப் படைத்திருக்கிறார். அதற்கான இறைத்தூதை நாங்கள் கொண்டு செல்கின்றோம் அவ்வளவுதான்.
நாங்கள் இறைத்தூதோடு சேர்ந்து சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இதனை நாங்கள் 42 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றோம். தற்போது எமது பணிகள் வாகரையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அடுத்த வருடங்களில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியாவில் முன்னெடுக்க இருக்கின்றோம்.
எங்களது சமூகசேவையை நாங்கள் கிளிநொச்சி, முள்;ளியவளை, பலாங்கொடை, நாவலப்பிட்டி போன்ற பிரதேசங்களில் மேற்கொண்டுள்ளோம். விசேடமாக யுத்தத்தினால் பாதிப்புற்ற பகுதிகளில் முன்பள்ளிச் சிறார்களுக்கான இலவச கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். கணவனை இழந்த பெண்களுக்கான தையல் பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். வருமானம் குறைந்த கும்பங்களைச் சேர்ந்த குழுந்தைகள் 400 பேரைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வருகின்றோம். அத்துடன் 25 குடும்பங்களிலுள்ள பிள்ளைகளைத் தெரிவு செய்து அவர்களது உயர்தரம் வரையான கல்விச் செலவுகளை நாங்கள் பொறுப்பெடுத்திருக்கின்றோம். கற்பினித் தாய்மாருக்கான போசாக்கு வழங்கும் செயற்திட்டங்களையும் மேற்கொண்டுள்ளோம். அதே போன்று கைவிடப்;பட்ட உறவுகளுக்கும் எம்மாலான உணவு உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
சமயத் தொண்டர்கள், புத்திஜீவிகள் அரசியலை நாடக்கூடாது. அரசியல் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றது. ஆன்மீகம் இறைவனால் தெரிவு செய்யப்படுகின்றது. அரசியலுக்குரியவர்கள் இந்த 13வது திருத்தம் தொடர்பில் மக்களுக்கான விடயங்களை ஆராய்ந்து செயற்படுத்துவார்கள். நாங்கள் எங்களது பிரார்த்தனை மூலமாக மக்களுக்கான நியாயமான விடயங்கள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். எங்களது பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்மந்தன் வந்திருக்;கின்றார். அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி அன்று பிரதமராக இருக்கும்போது வந்திருக்கின்றார். தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எங்களுக்கு ஒரு அழைப்பு வந்;திருக்கின்றது. இங்கு 13 என்பதற்குள் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு உகந்ததான விடங்கள் வரவேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை.
நடந்தவை முடிந்துவிட்டன, அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இயேசு கிறிஸ்து அதிகாரங்களை தன் சீடர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். பகிர்ந்து கொடுக்கப்படும் போது அதனைக் கொடுப்பவரும் தன்னைப் பாதுகாக்க வேண்டும். பெற்றுக் கொள்பவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களுக்கு ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான அழைப்பு நேரடியாகக் கிடைக்கவில்லை. பத்திரிகை நண்பர் ஒருவர் ஊடாகவே தொடர்பு கிடைத்துள்ளது. அவ்வாறு நாங்கள் ஜனாதிபதியைச் சந்திக்கும் போது நிச்சயமாக 13வது திருத்தம் தொடர்பிலான எங்கள் நிலைப்பாடடையும் ஆன்மீக ரீதியில் வெளிப்படுத்துவோம். அதற்கு முதலில் நாங்கள் 13வது திருத்தம் தொடர்பில் ஒரு தெளிவினைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
இந்த நாட்டில் இகனங்களுக்கடையிலான பிரச்சனைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. எதிர்காலத்தில் மதத்தின் மூலமாக ஒரு குழப்பம் ஏற்படுத்தப்படாமல் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள் சமாதானமாக இதனை வழிநடத்த வேண்டும். அரசியல் யாப்பின் பிரகாரம் மதத் சுதந்திரத்தைப் பின்பற்றி நாங்கள் ஆராதிப்போம் என்று தெரிவித்தார்.
ஏற்பாட்டுக் குழுவின் சிரேஸ்ட ஊடக இணைப்பாளர் தேவதாஸ் சவரிமுத்து, வாகரை பகுதி போதகர் ஸ்ரீகாந்தா உள்ளிட்ட குழுவினர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment