கிழக்கு மாகாண ஆளுநரின் பணிபுரைக்கு அமைவாக டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அழிக்கும் செயற்பாடுகள் துரிதமாக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநரின் பணிபுரைக்கு அமைவாக டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அளிக்கும் செயற்பாடுகள் துரிதமாக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை(30.06.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
மருந்துகள் இறக்குமதி தொடர்பில் உரிய விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெங்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை குறித்து நாம் மிகவும் கவலை அடைகின்றோம். மட்டக்களப்பு மாவட்டம் டெங்கு பரவும் மாவட்டங்களில் முதன்மையாக இருப்பதனால் நாங்கள் பிராந்திய சுகாதார சேவை பணிமனையுடன் இணைந்து பிரதேச, மாவட்ட, மட்டங்களில் நகர உள்ளுராட்சி சபைகளின் உதவியுடன். பொது சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து பாரிய வேலை திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
இதற்கு உதவியாக கிழக்கு மாகாண ஆளுநரின் பணிபுரைக்கு அமைவாக உள்ளூராட்சி திணைக்களங்கள், அரச திணைக்களங்களின் ஊழியர்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டு இந்த வேலை துரிதமாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் சிவில் சமூக அமைப்பினரின் உதவியுடன் இதனை துரிதமாக கட்டுப்படுத்தற்குரிய வேலைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment