மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்.
மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களத்துடன் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த தொழிற்சந்தை மற்றும் தொழிற் பயிற்சி வழிகாட்டல் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் களுதாவளை கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை(20.07.2023) இடம்பெற்றது.
இந்த தொழிற்சந்தை மற்றும் தொழிற் பயிற்சி வழிகாட்டல் நிகழ்வில் அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி, தனியார் தொழில் வழங்கல் ஆகிய முப்பதிற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களின் சேவைகள் பற்றி இதன்போது பங்கேற்றிருந்த இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தியதுடன் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.
பிரதேச செயலக மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர்களான க.ரவீந்திரன் மற்றும் தெ.ராகவன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த. நிர்மல்ராஜ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நானுறிற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தாதியர் பயிற்சி, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி தையலாளர், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி திருத்தினர், அழகுக்கலை மற்றும் சிகை அலங்கரிப்பாளர், வெதுப்புனர் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பம், மரக்கைவினைஞர், அலுமினியம் பொருத்துனர்,மின்னியலாளர, உருக்கி ஒட்டுனர், நீர்க்குழாய் பொருத்துனர்,கணணி வடிவமைப்பாளர், கணணி பொறிமுறை, கட்டுப்பாட்டாளர், உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அமைப்புக்கள் இதன்போது தமது பயிற்சி மற்றுமு; வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் கலந்து கொண்டிருந்த இளைஞர் யுவதிகளுக்கு விளக்கங்களையும், தகவல்களையும் வழங்கினர்.
0 Comments:
Post a Comment