மட்டக்களப்பு மாங்கேணியில் மாபெரும் சமாதானப் பெருவிழா.
உங்கள் இல்லங்களிலும் நிம்மதிதரும் மட்டக்களப்பு மாவட்டத்தின், மாங்கேணியில் மாபெரும் சமாதானப் பெருவிழா – 2023 எனும் நிகழ்வு எமதிர்வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு (28,29,30) தினங்களில் தினமும் 4 மணிக்கு பெரேயா ஜெபவீடு வளாக திறந்த வெளி அரங்கில் தேச செய்தியாளர் பிரபல சுவிசேஷகர் சகோ.ஜெயம் சாரங்கபாணி அவர்களால் நடைபெறவுள்ளதாக இதன் ஏற்பாட்டுக் குழுவின் சிரேஸ்ட ஊடக இணைப்பாளர் தேவதாஸ் சவரிமுத்து தெரிவித்துள்ளார்.
இறைவன் நியமித்ததை யாரைக்கொண்டும் எப்படியும் நிறைவேற்றி முடிக்க வல்லவர். அந்த வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்களின் ஆன்மீக விடுதலைக்காக ஆத்தும பாரத்தோடு சுமார் 42 வருடங்கள் ஆவிக்குரிய வாழ்வில் இறை பணியில் அயராது உழைத்து வரும் முகத்துவார “மிஸ்பா ஜெப மிஷனரி” ஊழியத்தின் ஸ்தாபகரும், போதகரும், சுவிசேஷகருமான சகோ.ஜெயம் சாரங்கபாணி அவர்களின் தேவ செய்தியுடனான மூன்று நாள் மாபெரும் ஜெப ஒன்றுக்கூடுகை மட்டக்களப்பு, வாகரை, மாங்கேணியில் பெரேயா ஜெபவீடு வளாக திறந்தவெளி அரங்கில் மக்களின் ஆசீர்வாதத் திற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.
வாழ்க்கையில் பலதரப்பட்ட பிரச்சினைகள், அடிமைத்தனங்கள், பாவ சாபம் போன்றவற்றில் இருந்து விடுதலை பெற விரும்பும் அனைவருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம். முற்றிலும் இலவசமா நடைபெறும் இந்நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு போதகர் ஸ்ரீகாந்த் 0778487666, முகத்துவார மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம் - 0771761450, ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம், எனவும் அவ்வமைப்பின் சிரேஸ்ட ஊடக இணைப்பாளர் தேவதாஸ் சவரிமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment