17 Jul 2023

“தராக்கி” ஈழத்தமிழ் ஊடக முன்னோடி எனும் கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு.

SHARE


தராக்கிஈழத்தமிழ் ஊடக முன்னோடி எனும் கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு.

தராக்கிஈழத்தமிழ் ஊடக முன்னோடி எனும் கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு, சனிக்கிழமை(15.07.2023) மாலை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அதன் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சி. மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உருவப்படத்திற்கு அவரது மனைவி பவானி சிவராம் அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தீபச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தியதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டன.

தொடர்ந்து நூலின் முதல் பிரதியை சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் மனைவி பவானி சிவராம் அவர்களுக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் .பாக்கியராசா அவர்களால் வழங்கிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூல் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பிரபல சிங்க மொழி பாடகர் ஜெயதிலக பண்டார அவர்களினால் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் பற்றி எழுப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான பாடல்களை அவர் பாடினார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா. சிறிநேசன், துரைராஜசிங்கம், சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் குடும்ப உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.நகுலேஸ், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கத்தினர், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஆயவாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் ஊடகப் பணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பெடிகமகே, ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சரவணண் உள்ளிட்டோர் உரையாற்றினர்.


































 



SHARE

Author: verified_user

0 Comments: