21 Jun 2023

டெங்கு செயற்றிட்டம் அமுல்படுத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்.

SHARE

டெங்கு செயற்றிட்டம் அமுல்படுத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு செயற்றிட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை(21.06.2023) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்க உணரப்பட்டடுள்ளமையால் இலங்கைச் செஞ்லுவைச்ச சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் தெரிவு செய்யப்பட்ட பொதுஇடங்கள், பாடசாலைகள், உள்ளிட பல இடங்களில் சிரமதான நடவடிக்கைகள் முன்நெடுக்கப்படவுள்ளதோடு, வீடுகளுக்கும் நேரில் சென்று மக்களை அறிவுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் .வசந்தராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தடன் இணைந்து, கிராம மட்ட அமைப்புக்கள், மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் இம்மாத இறுத்திக்குள் ஆரம்பிக்கப்படும் இந்நடவடிக்கை தொடற்சியாக நான்கு மாதங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது எவ்வாறு  கடமையினை மேற்கொள்வது என்பது தொடர்பில் செஞ்சிலுச் சங்கத் தொண்டர்களுடனான ஆரம்பக்கட்ட கலந்துடையாடலே இடம்பெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் .வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் செயலாளர் சா.மதிசுதன், கிளைநிறைவேற்று உத்தியோகஸ்த்தர் பி.வேணுஷா, மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: