மட்டு.மாவட்டத்தில் சிறுபோக வேளான்மை புதுவித களையினால் பெரும் பாதிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் புதுவித களையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கொக்கொட்டிச்சோலை
பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள சிறுபோக. நெற்செய்கையில் விளைந்துள்ள நெற்செய்கைக்கிடையில்
காட்டு வேளாண்மை என்கின்ற கிலிக்கி பயிர்கள் பெரிதாக வளர்ந்து சிறுபோக நெற்செய்கையை
மூடிவிடுவதால் முன்னர் விளைந்த நெற்பயிர்களை மூடிவிடுவதுடன் அவைகள் கீழே விழுந்து முழுநெற்சைய்கையையும்
அழித்து விடுவதால் விவசாயிகள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த களைகளை அகற்ற
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள்
கருத்து வெளியிட்டனர்.
0 Comments:
Post a Comment