"பிளாஸ்டிக் மூலம் ஏற்படக்கூடிய மாசைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ் வருடத்துக்கான
தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி
சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு
நடாத்தப்படுகின்றன.
அந்த வகையில் "வளி மாசாக்கம் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களை குறைக்கும் தினம் "என்ற தொனிப் பொருளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் துவிச்சக்கரவண்டி சவாரி பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் மற்றும் கணக்காளர் திரு சா. விக்னராஜா ஆகியோர் கலந்துகொண்டு இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
அத்துடன் பல கிராம சேவகர் பிரிவுகளில் மர நடுகை நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment