டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்குடன் கிராம்புற பாடசாலைகளுக்கு வன்னி ஹோப் திறன் வகுப்பறைகளை தாபித்து வருகிறது - பணிப்பாளர் எம்.ரீ. எம். பாரிஸ்.
கல்வி அமைச்சின் கலைத்திட்ட மாறுபாடுகளுக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கையில் பல்வேறு கிராம்புர பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை தாபித்து அதன் மூலம் எதிர்கால சந்ததியினரின் தரமானதும் தொழிநுட்பத்துடன் கூடியதுமான கல்வியை வழங்குவதே வன்னி ஹோபின் நோக்கமாகும் என வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ. எம். பாரிஸ் தெரிவித்தாா்.
சம்மாந்துறைக் கல்வி
வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி விவேகானந்தா மகாவித்தியத்தில் திறன் (ஸ்ர்மாட்) வகுப்பறை
ஒன்று செவ்வாய்கிழமை(20.06.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இநத் நிகழ்வில் பிரதம
அதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டர்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வன்னி ஹோப் நிறுவனம் அவுஸ்ரேலியாலைத் தலமையமாகக் கொண்டு இயங்கினாலும் இலங்கையில் பின்தங்கிய
கிராமங்களில் பல்வேறு வகையான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி சா்ந்த திட்டங்களை இன,மத.
பிரதேச வேறுபாடின்றி வழங்கி வருகின்றது. விசேடமாக
கல்வி சாா்ர்நத விடயங்களில் வன்னி ஹோப் நிறுவனம் கூடுதல் அவதானிப்புகளை செய்து திட்டங்களை
அமலாக்கி வருகின்றது. வறுமைகை் கோட்டின் கீழ்
வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மாதாந்த புலமைப் பரிசில் பண உதவிகளும், பல்கலைக்கழக
மாணவர்களுக்கு உதவித் தொகைகளும், அறநெறி மற்றும் முன்பள்ளி சிறாா்களுக்கு சத்துணவுத்
திட்டங்கள், கிராமியப்புர பாடசாலைகளுக்கு திறன்வகுப்பறை மற்றும் கணினிக் கூடங்கள் நிறுவுதல்,
மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் போன்ற பல கல்வி நலன்சாா் திட்டங்களில் வன்னி
ஹோப் ஈடுபட்டு வருகின்றது. இதன் மூலம் சிறந்ததொரு மாணவ சமூகத்தினை உருவாக்கவும், சிறப்பான
தொழில் சாா் இளைஞர்களை உருவாக்கவுமே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள
பொருளாதார இடரை்பாடுகளுக்கு மத்தியில் கற்றல் இடர்பாடுகளை மாணவர்கள் எதிர்நோக்கி தங்களுடைய
கல்வி நடவடிக்கையை பாதிக்காது அவர்களின் கற்றல் நடவவடிக்கை தங்குதடையின்றி செல்ல வேண்டும் என்ற அவா எமக்குள்ளது. வறுமையைக் காட்டி
கல்வியை இடை நடுவே நிறுத்தி விடாமல் அவை தொடர்ந்தும் முன்செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன்
வன்னி ஹோப் நிறுவனம் கல்வி சாா் திட்டங்களில் கூடுதல் அவதானிப்பை செலுத்தி அதிக பணத்தினை
இது போன்ற திட்டங்களுக்கு செலவு செய்கின்றது. என்று தனது உரையில் குறிப்பிட்டாா்.
அவுஸ்ரேலியாவிலுள்ள
அப்பாடசாலையின் முன்னாள் அதிபர் வேலுப்பிள்ளை குடும்பத்தினரதும், மற்றும் அமெரிக்காவிலுள்ள
நல்லையா பவுண்டேனசினதும் முழு நிதி அனுசரணையில் வன்னிஹோப் இலங்கை அலுவலகத்தினால் இதந்த திறன்வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆறு இலெட்சத்திற்கு அதிகமான நிதிப்
பங்களிப்பில் இந்த ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வித்தியாலய அதிபர்
எம்.தருமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாஸீர் அறபாத்
முகைடீன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதாயாளன், நிதி வழங்குனர் சார்பில் அப்பாடசாலையின்
முன்னாள் அதிபரின் துணைவியார் திருமதி. வேலுப்பிள்ளை, மற்றும் வன்னிஹோப் நிறுவனத்தின்
இணைப்பாளர்களான எஸ்.ரேகா, ஆர்.கணேசமூர்த்தி, எம்.யு.முகமட்.வஸீம், மற்றும் ஆசிரியர்கள்,
மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்
என்பதுடன் குறித்த கிராமப் பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் கல்வியைத் தொடர்வதற்கு உதவி
செய்த வன்னிஹோப் நிறுவனத்திற்கு இதன்போது பாடசாலைச் சமூகம் தமது நன்றியறிதலைத் தெரிவித்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment