9 Jun 2023

மட்டக்களப்பு மாங்காட்டில் பெண் ஒருவர் மரணம் மூவர் வைத்தியசாலையில் அனுமதி உணவு ஒவ்வாமை என சந்தேகம்.

SHARE

மட்டக்களப்பு மாங்காட்டில் பெண் ஒருவர் மரணம் மூவர் வைத்தியசாலையில் அனுமதி உணவு ஒவ்வாமை என சந்தேகம்.

மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் வியாழக்கிழமை (08.03.2023) மாலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமையால் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் 27 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும், 50 வயதுடைய பெண், 19 வயதுடைய ஆண், மற்றும் மூன்றரை வயதுடைய ஆண்பிள்ளை ஆகிய மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்இதில் 50 பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாவார்.

வியாழக்கிழமை பிற்பகல் கடற்கரையில் மா         ங்காடு பகுதியிலுள்ள கடற்கரைக்குச் சென்றுள்ள நிலையில் அங்கு மீனவர்களின் வலையில் சிக்கிய குறித்த மீனை எடுத்து வீசியுள்ளனர். இதனை குறித்த குடும்பத்தினர் பொறுக்கியுள்ளதாகவும், அப்போத இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை அதனை எடுக்க வேண்டாம் என மீனவர்கள் தெரித்ததையும் அவர்கள் பொருட்படுத்தாது அந்த மீனினத்தை அவர்கள் எடுத்துச் சென்றிருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குடும்பத்தினர் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் கடல் மீனினமான பேத்தை என்ற மீனை அவர்கள் மதிய உணவுக்காக சமைத்து உட்கொண்டதன் காரணமாகவே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பகுதி பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: