23 Jun 2023

வன்னி ஹோப் மற்றும் காந்தி இல்லம் நிறுவனங்களினால் நண்ணீர் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

வன்னி ஹோப் மற்றும் காந்தி இல்லம் நிறுவனங்களினால் நண்ணீர் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு.

வன்னி ஹோப் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையான வாழ்வதார மேம்பாட்டு செயற்திட்டத்தின்  கீழ் திருகோணமலை குச்சவெளிப்  பிரதேச செயலகத்திற்குட்பட்ட  கோபாலபுரம் எனும் கிராமத்தில் உள்ள நெடுங்கேணி நண்ணீர் மீன் வளர்ப்பு சங்க அங்கத்தவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வன்னி  காந்தி இல்லம் நியுசிலாந்து தமிழ் நிதியம் நிதி அணுசரனையில் வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ.எம் பாரிஸ் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

மீன்பிடி மற்றும் விவசாய மேம்படுத்தல் செயற்பாடுகளுடாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய பொருளாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் வன்னி ஹோப் நிறுவனத்தின் சமூகமட்ட அமைப்பு நிறுவனங்களுக்கான நுண் மாணியத்திட்டத்தின் கீழ் சுமாா் ஐந்து இலட்சம் பெறுமதியான மீன் வலைகள், மீன் பெட்டிகள், வல்லங்கள் உள்ளிட்ட  பொருட்கள் வழங்கி வைக்கப்படது.

தேசிய உயிரியல் வாழ் அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்டதும் குறித்த அதிகார சபையினால் மேற்பபா்வை செய்யப்படுவதுமான நெடுங்கேணி மீனவர் சங்கத்தின் இயலளவு மற்றும் அங்கத்தவர்களின்  வாழ்வாதாரத்தினை உயர்தும் அடிப்படையில் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை நிலைபேறு இலக்குகளான வறுமை ஒழிப்பு, சமூக நல்வாழ்வு ஆகிய இலக்குள் அனுகுமுறை அடிப்படையில் இந்த திட்ட அமுலாக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.













SHARE

Author: verified_user

0 Comments: