மீண்டும் அரங்கேறிய பசு கொலை அராஜகம் .
மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லைக் கிராமங்களான மைலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18.06.2023) வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இறைச்சியை களவாடிச் சென்றதன் பின்னர் பசுவின் தலை கழிவுகள் மற்றும் வயிற்றில் இருந்த கன்று என்பனவும் அவ்விடத்திலேயே வீசப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பசு மகாவலி கண்கானிப்பு காரியாலயத்திற்கு மிக அருகில் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற செயற்பாடுகள் மற்றும் மாடுகளை களவாடுதல் அல்லது காயப்படுத்துதல் என்பன இப்பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்விடையம் குறித்து கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த அப்பிரதேசத்தை அரசாங்கம் மகாவலி டீ வலயமாக பரகடணப்படுத்தப் பட்டதன் பின்னரே இவ்வாறு தமிழ் மக்களது கால்நடைகளைச் சுடுவதும், களவாடுவதும், தமிழர்களை மிரட்டுவதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்துவரும் தமிழ் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment