மக்கள் பேரவைக்கான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் வலைப்பின்னல் மக்கள் பேரவைளைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் அமைந்த கலந்துரையாடல் மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை 13.06.2023 இடம்பெற்றது.
மட்டக்களப்பு. ஊறணியில் அமைந்துளள சிலோன் அமெரிக்கன் மிஷன் தேவாலய மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மக்கள் பேரவைக்கான இயக்க ஸ்தாபகர்களான செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, அடிகளார் ஜீவந்த, ஆர். ரஜீவ்காந்த், ஐனு தரங்கா உட்பட இன்னும் பலரும் இந்த நிகழ்வை நெறிப்படுத்தினர்
அதேவேளை மட்டக்களப்பிலிருந்து மனித உரிமை ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்குபற்றி தத்தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஸ்தாபகர்கள்,; மக்கள் பேரவைக்கான இயக்கம் ஆரம்பித்து ஓராண்டு பூர்த்தியாகின்ற காலத்தில் நாடு தழுவிய ரீதியில் மக்கள் பேரவைக்கான ஆதரவைத் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டின் பல பிரதேசங்களிலும் மக்கள் பேரவைக்கான இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கருத்துப் பகிர்வை மேற்கொண்டு வருகின்றோம்.
அந்தந்தப் பிரதேச சிவில் சமூகங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு மக்கள் பேரவையை இணைத்து நாடு முழுவதும் மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புதல் இதன் நோக்கமாகும்.
நாட்டு மக்கள் முடிவுறாத அரசில் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இதனா
ல் மக்கள் சோர்வடைந்து விட்டனர். எனவே நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மக்களே அணி திரண்டு தீர்வுகளைக் கண்டாக வேண்டிய தேவை உள்ளது” என்றனர்.
மக்கள் சக்தி பற்றிய மக்களின் எண்ணம், சிவில் சமூகம் முகம் கொடுக்கும் அன்றாடப் பிரச்சினைகள், அவற்றுக்கான தங்கள் போராட்டங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடும் பிரயத்தனம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே மக்கள் பேரவைக்கான இயக்கம் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படுகின்றது” என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment