குரங்குகளின் தொல்லைகள் அதிகரிப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பல கிராமங்களிலும், குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
இரவில் மட்டக்களப்பு வாவி ஓரங்களில் அமைந்துள்ள பற்றைக் காடுகளில் தங்கி நிற்கும் குரங்குகள், பகல் வேளையானதும், கிராமங்களுக்குள் உட்புந்து, வீட்டுக் கூரைகளில் நடமாடித் திரிவமனால் ஓடுகள் உடைபடுகின்றன, இதுபோல் குடியிருப்புக்களில் அமைந்துள்ள மா, கொய்யா போன்ற பயன்தரும் மரங்களையும், பழ வகைகளையும் சேதப்படுதி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மக்கள் குடியிருப்புக்களில் மாத்திரமின்றி கடற்கரை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மிளகாய், கத்தரி, பயற்றை, வெங்காயம், போன்ற மேட்டுநிலப் பயிற்செய்கைகளையும் சேதப்படுத்தி வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரவிக்கின்றனர். எனவே கிராமங்களுக்குள் மாத்திரமின்றி, தமது வாழ்வாதாரத்திற்கும் பெரும் இடைஞ்சலாக இருந்துவரும் குரங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment