குருக்கள்மடத்தில் நடைபெற்ற சித்திரைப்புதுவருட கலாசார விளையாட்டு விழா.
இதன்போது மா.தயாபரன், ஓய்வு நிலை இலங்கை நிர்வாக சேவை - விசேட தரம் முன்னாள் பணிப்பாளர், வர்த்தக வாணிப நுகர்வோர் விவகார அமைசு, மற்றும், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள்,
இதன் பொது கிராமிய கலை கலாச்சார விழுமியங்களை பறைசாற்றும் விளையாட்டுகளான வழுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சமர், முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், கயிறு இழுத்தல், ஜோடியாக ஐஸ்கிரீம் உண்ணல், தேசிக்காய் கரண்டி, சிறுவர்களுக்கான பலூன் ஊதி உடைத்தல், முட்டாய் ஓட்டம், ஆண்,பெண் இருபாலாருக்குமான சங்கீத சைக்கிள் சவாரி, முட்டை பிடித்தல், வினோத உடைப்போட்டி என பல்வேறு பட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.
இதன் போது வெற்றியீட்டி வீரர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுப்பொருட்கள், பணப்பரிசில்களையும், அதிதிகள் வழங்கி வைத்தனர்.
இதன்போது ஏசியன் விளையாட்டு கழகத்தினை ஆரம்ப காலத்தில் உருவாக்கிய, மூத்த உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment