26 May 2023

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு விழிப்புணர்வு சிரமதானம்.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு விழிப்புணர்வு சிரமதானம்.

நாட்டில் டெங்கு நோயானது மிக வேகமாக பரவி வருகின்றமையால் அதை கட்டுப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்  அனைத்து திணைக்களங்கள் ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் பிரதான வீதியோர சிரமதானம் ஒன்று திங்கட்கிழமை(22.05.2023) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இதற்காக வேண்டி பிரதேச சபையின் அலுவலக உத்தியோகத்தர்கள்நான்கு குழுக்களாகப் பிரித்து இச்சிரமதானத்தை முன்னெடுத்திருன்தனர்முதலாவது குழுவினர் களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் ஆலய வீதிக்கு முன்பிருந்து பிரதேச சபை அலுவலகம் நோக்கியும்இரண்டாவது குழு தேத்தாத்தீவு பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து களுதாவளை பொது விளையாட்டு மைதானம் வரையிலும்மூன்றாவது குழுவினர் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்திலிருந்து களுதாவளை வன்னியார் வீதி வரைக்கும்நான்காவது குழுவினர் களுதாவளை வன்னியார் வீதியில் இருந்து பிரதேச சபை அலுவலகம் வரைக்குமாக இச்சிரமதர்னப்பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.


எமது .தெ..பற்று பிரதேச சபை எல்லைக்குட்ட மேற்படி மூன்று கிராமங்களின் பிரதான வீதி இரு மருங்கிலும் பொதுமக்கள்அவ்வீதியால் போக்கு வரத்தினை மேற்கொள்பவர்களால் வீசப்படும் பொருட்களை அகற்றுவதன் ஊடாக பொதுமக்களுக்கான ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும்டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாகவும் வீதியோர தூய்மையாக்கல் செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த சிரமதான நடவடிக்கையின் போது பிரதான வீதி இரு மருங்கிலும் காணப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக்கப்பிளாஸ்ரிக் போத்தல்தகர ரின்கள்சிரட்டையோகட்கப்கண்ணாடி போத்தல்கள் சேகரிக்கப்பட்டனஇந்த சிரமதான நிகழ்வில் 70 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததோடுடெங்கு நோய்த் தாக்கம் தொடர்பாக பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக பிரசாரம் செய்யப்பட்டன.





 

SHARE

Author: verified_user

0 Comments: