2 May 2023

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு.

SHARE

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியக் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளை பொது மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது பெரிய கல்லாறு பகுதியிலிருந்து பேரணி ஒன்றும், மட்டக்களப்பு நகரிலிருந்து மற்றுமொரு பேரணியும், களுதாவளை பொது மைதானத்தை வந்தடைந்தது.

பலத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரின்  பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும்,

கிராமிய வீதிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான, சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், தொழிற்சங்கத் தலைவர், ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள், கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கட்சியின் தலைவர் உள்ளிட்ட பலர் உரையாற்றியதுடன், தொழிலாளர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், தொழில்கள் ரீதியாக அங்கு காட்சிப் படுத்தப்பட்ட விடையங்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியில் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரால் தொழிலாளர் தின பிரகடனம் வாசிக்கப்பட்டு கட்சியின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 











 




























SHARE

Author: verified_user

0 Comments: