1 May 2023

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கிருஷ்ண கீதம் இறுவட்டு வெளியீடடு விழா.

SHARE

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கிருஷ்ண கீதம் இறுவட்டு  வெளியீடடு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலின் மூல மூர்த்தியாகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பாடல்கள் அடங்கிய கிருஷ்ண கீதம் எனும் இறுவட்டு வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை(30.04.2023) குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விழாக்குழுத் தலைவர் .ஞானரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷண மிஷண சுவாமி ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மகராஜ், சிவஸ்ரீ .மயூரவதனக் குருக்கள் சிவஸ்ரீ சோ. சோமேஸ்வரம் குருக்கள் ஆகியோரின் ஆசியுடன்,       

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ.கோபாலரெத்தினம், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர்  திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடி மற்றும் கிராம பெரியோர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், சைவப் பெரியோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.      

இறுவட்டின் பிரதிகள் இதன்போது அதிதிகளுக்கு வழங்கி வைக்கக்பட்டதுடன், இறுவட்டின் நயவுரையை கலாநிதி நிர்மலேஸ்வரி பிரஷாந்த் அவர்கள் நிகழ்த்தினார். இதன்போது குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், மற்றும் அதிதிகளுக்கும், விழாக்குழுவால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கில் ஆற்றுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: