மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலையின்) வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை(08.09.2023) மாலை மேற்படி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் கே.சத்தியமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன் அவர்கள் இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும் இதன்போது, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்(நிதி) எஸ்.நேசராஜா, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், வைத்தியர் எஸ்.மயுரேஷன், கடற் படையணியின் 38வது பிரிவின் கட்டளை அதிகாரி ஜி.நிலாந், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ஏ.பகிரதன், சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியின் அதிபர் ஜே.தியாகராஜா, உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், கிராமிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டுத்துறை அதிகரிகள், மாணவர்கள், மழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
பாரதி, நாவலர், விபுலானந்தர், ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையே போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். இதில் பாரதி இல்லம் 493 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், நாவலர் இல்லம் 448 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், விபுலானந்தர் இல்லம் 414 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்க அதிதிகளால் வெற்றிக் கேடயங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசலை ஆசிரியர்களுக்கும், பழைய மாணவர்களுக்குமான விளையாட்டுப்போட்டிகளும் இதன்போதுஇடம்பெற்றன. தொடர்ந்து மாணர்வகளின் அணிநடை, மற்றும் வேண்வாத்திய இசை என்பன பார்ப்போரைக் கவந்ததுடன், இதன்போது ஆற்றுகை செய்யப்பட்ட பாரம்பரிய கலை நிகழ்வுகள் அனைவரையும் கொள்ளைகொள்ள வைத்தையும் சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment