25 Apr 2023

மட்டு.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்.இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

SHARE

மட்டு.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

பாராளுமன்றத்தில்  கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக செவ்வாய்கிழமை (25.04.2023) வடக்கு கிழக்கில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால்  இடம்பெற்றது.

இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதுடன் மட்டக்களப்பில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து சேவைகளும் பாரியளவில் இடம்பெறவில்லை. ஹர்த்தால் காரணமாக மாவட்டத்தின் வழமையான அலுவல்கள் பாதிக்கப்பட்டிருந்தன.















 

SHARE

Author: verified_user

0 Comments: