முற்றாக முடங்கியது களுவாஞ்சிகுடி நகரம்.
இலங்கை அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத சட்டத்தை எதிர்த்தும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் செவ்வாய்கிழமை (25.04.2023) முன்னெடுக்கப்பட்ட நிருவாக முடக்கலால் களுவாஞ்சிகுடி நகரமே முற்றாக முடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பொதுச்சந்தை, உள்ளிட்ட பிரதான வர்த்தக நிலையங்கள், கடைகள், நகைக்கடைகள், உள்ளிட்ட அனைத்தும் செவ்வாய்கிழமை திறக்கப்படவில்லை.
நகரில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்கள் சென்றிருக்கவில்லை. அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை. எனினும் மருந்தகங்கள், வைத்தியசாலைகள் என்பன வழமை போன்று இடம்பெறுவதையும், ஒருசில தனியார் மற்றும் இலங்கை அரச பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அதில் பிரயாணிகள் மிக மிகக் குறைந்தளவானோரே பயணிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment