29 Apr 2023

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசழிப்பு விழா.

SHARE

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசழிப்பு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து கடந்த 5 வருடங்களாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசழிப்பு விழா களுதாவளை மகாவித்தியாலயம்(தேசிய பாடசாலை) கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(28.04.2023) காலை நடைபெற்றது.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சந்திரகாலா மகேந்திரநாதன், தொழிலதிபர், .தவஞானசூரியம், மற்றும் கல்வி அதிகாரிகள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மதத் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கடந்த 5 வருடங்களாக பட்டிருப்பு வலயத்திலிருந்து மாகாணம், மற்றும் தேசிய மட்டம் வரையில் கல்வி, மற்றும், இணை பாடவிதான செயற்பாடுகளில் சாதனை படைத்த மாணவர்கள் இதனபோது சான்றிழ் மற்றும், கேடயங்கள் வழங்கி கௌரவிப்பட்டனர்.


























SHARE

Author: verified_user

0 Comments: