இரு வீடுகளை உடைத்து பல இலட்சம் பொருட்கள் திருட்டு-ஒருவர் கைது இருவர் தேடப்படுகின்றனர் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சம்பவம்.
இரு வீடுகளை உடைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி மற்றும் நதியா கடற்கரை பிரதேசம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை (08.04.2023) இடம்பெற்றிருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார்.
மீன் பிடி இலாகா வீதியிலுள்ள
வீடொன்றின் கதவை உடைத்து 4 பவுண் தங்க நகை 5 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றையும் நதியா
கடற்கரை பகுதியிலுள்ள தோட்டமொன்றிலுள்ள வீட்டுக் கூரையை உடைத்து உள்ளே இறங்கி மின்விசிறி
கமறாக்கள் தண்ணீர் ஹீற்றர் வானொலிப் பெட்டி உட்பட பல பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம்
தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் மேலும் இருவரைத் தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மின்விசிறி மற்றும் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் உட்பட
திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவுள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment