1 Apr 2023

சேர்கிள் நிறுவனத்தினால் இளம் பெண் தொழில் முயற்சியாளர்கள் கௌரவிப்பு.

SHARE

சேர்கிள் நிறுவனத்தினால் இளம் பெண் தொழில் முயற்சியாளர்கள் கௌரவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று,மண்முனை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இளம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் வளர்ந்து வருகின்ற இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் நோக்கில் சேர்கிள் இளம் பெண்கள் அமைப்பு ஒழுங்கு செய்த விசேட நிகழ்வு சேர்கிள் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஜானி காசிநாதர் தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சீ. மண்டபத்தில் செவ்வாய்கிழமை(28.03.2023) இடம்பெற்றது.

இந் நிகழ்வின் போது யுனப்ஸ் (UNOPS) நிறுவனத்தின் அனுசரணையுடன் சேர்கிள் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமாதானத்தைக் கட்டியொழுப்பும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  நடாத்தப்பட்ட வியாபாரத் திட்டம், இயற்கை முறை விவசாயம் தொடர்பான பத்து நாட்கள் கொண்ட பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த முப்பது  (30) இளம் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு இச்சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 




SHARE

Author: verified_user

0 Comments: