மட்டக்களப்பில் 9 மாடுகளை திருடிய மூன்று பேர் பொலிசாரால் கைது-மாடுகளும் மீட்பு.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பல இடங்களில் உள்ளமாடுகளை நீண்ட காலமாக களவாடி அதனை காத்தான்குடி,
ஒல்லிக்குளம் போன்ற இடங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக அறுத்து
விற்பனை செய்து வந்த சந்தேக நபர்கள் மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன்
அவர்கள் களவாடி அறுப்பதற்காக மறைத்து வைத்திருந்த மூன்று மாடுகளையும் உயிருடன் மீட்டுள்ளதாக
காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மாடுகளை அறுத்து அதன் மாமிசக் கழிவுகளை புதைத்து வைத்திருந்த இடத்தையும் பொலிஸார் அடையாளம் கண்டு மாட்டின் உரிமையாளரின் உதவியுடன் கழிவுகள் புதைக்கப்பட்டிருந்த இடங்களைத் தோண்டி பொலிஸார் மீட்டெடுத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் களவாடிய மூன்று மாடுகளையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நாளை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறீ தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment