9 Apr 2023

கன்னன்குடாவில் இடம்பெற்ற வருடாந்த சிறுவர் மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி - 2023

SHARE

மட்டக்களப்பு மண்முனை மேற்கு மண்டபத்தடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த சிறுவர் மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி அண்மையில் இடப்பெற்றது.பாடசாலையின் அதிபர் க.சிவகுமார் தலைமையில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான  யோ.ஜெயச்சந்திரன் (நிர்வாகம்),  செ.மகேந்திரகுமார் (நிர்வாகம்), ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக யோ.சாள்ஸ் சஜீவன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் திட்டமிடல்), ந.குகதாசன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வி அபிவிருத்தி), மண்முனை மேற்கு கோட்ட அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழகங்கள், மலைமகள் கலாமன்றம், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், முதியோர் மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது சிறுவர் மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டு அதில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: