இலங்கையில் முதல் முறையாக உலக சித்தர் நாள் (சித்திரை 14 ) World Siddha day (April 14) முன்னிட்டு சித்த மருத்துவ விழிப்புணர்வு நிகழ்வு வந்தாறுமூலை இடம் பெற்றது.
உலக சித்தர்கள் நாள் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராகுல் ஐயர் சித்த ஆயுள்வேத இயற்கை மருத்துவ மையத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் அதன் நிறுவனர் கலாநிதி நல்லசாமி பிரதீபன் ஐயர் தலைமை இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வைத்திய அத்தியச்சகர் M.S.M லாபிர் ஆயுர்வேத சித்த வைத்தியசாலை ஏறாவூர், வைத்தியர் S. நிலோஜா மத்திய ஆயுர்வேத மருந்தகம் வந்தாறுமூலை ஆகியோர் கலந்து சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தனர்.
இன்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கம் வந்தாறுமூலை மேற்கு தலைவர் அ.கந்தசாமி உட்பட சமுதாய நலன் சார்ந்து சிந்தனை கொண்டவர்கள் பலர் கலந்து கொண்டனர். வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் அகில உலக இளம் சைவ மன்றம் எனபன இணைந்து ஏற்பாடு செய்தனர்.
0 Comments:
Post a Comment