8 Mar 2023

ஹகாட்டகஸ்திகிலிய கங் இந்திக்கம வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

ஹகாட்டகஸ்திகிலிய கங் இந்திக்கம வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

அனுரதபுரம் மாவட்டம்  ஹகாட்டகஸ்திகிலிய கங் இந்திக்கம வித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைய தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் (ONUR) பணிப்பாளர் சபை பிரதிநிதி கந்தசாமி கருணாகரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் குளோபல் அஸோஸியேஸனின் முழு அனுசரணையில் அப்பாடசாலை மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் திங்கட்கிழமை(06.03.2023) வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது அப்பாடசாலையில் கல்வி கயிலும் தரம் ஒன்று தொடக்கம் 5 வரையான அனைத்து மாணவர்களுக்கும், புத்தக் கைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டன.

ஹகாட்டகஸ்திகிலிய கங் இந்திக்கம வித்தியாலயத்தின் அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலககத்தின் (ONUR)பணிப்பாளர் சபை பிரதிநிதி கந்தசாமி கருணாகரன், குளோபல் அஸோஸியேஸன் பொதுச் செயலாளர் விஸ்வநாதன், வடமகாண நகர அபிவிருதி அதிகாரசபையின் பணிப்பாளர் திசாநாயக்கா, ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் சமன், அப்பகுதி இராணுவ பொறுப்பதிகாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். கோரிக்கைக்கு ஏற்ப தமது பாடசாலைகே நேரடியாக வருகை தந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமைக்காக அப்பாடசாலைச் சமூகம் இதன்போது நன்றியைத் தெரிவித்தனர்.




















SHARE

Author: verified_user

0 Comments: