சிவாச்சாரிய அபிஷேக விஞ்ஞாபனம் குரு பட்டமளிப்பு விழா.
மட்டக்களப்பு மாவட்டம் எருவில் ஸ்ரீ புளியடிப்பிள்ளையார், தேற்றாத்தீவு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன், ஆகிய ஆலயங்களின் பிரதமகுரு சிவஸ்ரீ.க.வடிவேல் ஐயா அவர்களுக்கு விஷேட தீட்சையும், நிர்வாணதீட்சையும், சிவாச்சாரிய அபிஷேகமும், அவரது புத்திரர்களான மதுமிதன், போதிசப்தன் ஆகியோருக்கு சமயப் பிரவேச தீட்சை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2023.03.24 ஆம் திகதி எருவில் ஸ்ரீ புளியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
சிவாச்சாரிய அபிஷேக தீட்சாகுரு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு தேசகீர்த்தி சமூகயோதி, கிரியாயோதி, சோதிடகலாமணி, ஈசானசிவாச்சாரியார் சிவஸ்ரீ.ஜீ.என்.திருக்கணேஸ்வரக் குருக்கள், மற்றும் வித்தியாகுருவும் சர்வ சாதகாசிரியருமான குருமண்வெளி ஸ்ரீ நாகதம்பிரான், மகாவிஷ்ணு ஆலய பிரதம குருவுமான சிவாகமஞானபாணு, செஞ்சொற்சாதகர், சாதகமாமணி, சிவாகம கிரியா திலகம், தற்புருஷ சிவாச்சாரியர் சிவஸ்ரீ.வ.கு.யோகராசா குருக்கள் ஆகியோர், மண்முனை தென் எருவில் பற்று குருமார்களும், விவித வித்தியாபீட போதனாசிரியர்களும், புடைசூழ சிவாச்சாரிய அபிஷேக விஞ்ஞாபன குரு பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.
0 Comments:
Post a Comment