கல்விசார் உத்தியோகஸ்த்தர்களுக்கு மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பண்புகளைக் கட்டியெழுப்பதல் செயலமர்வு.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அதிபர் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்த்தர்களுக்குமான மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பண்புகளைக் கட்டியெழுப்பதல் எனும் செயலமர்வு களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(03.03.2023) இடம்பெற்றது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களின் தலைமையில், பட்டிருப்பு கல்வி வலயமும், மனித உன்னதத்திற்கான சத்தியசாயி கல்வி நிறுவனமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திது இதனை நடாத்தியிருந்தது. இதன்போது சத்தியசாயி கல்வி நிறுவனத்தின் பிரதிநிதி, வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் சுவாமி உள்ளி;டட பலரும் இதன்போது கலந்து கொண்டு கல்விசார் உத்தியோகஸ்த்தர்களுக்கு தெழிவான விளக்கங்களையும், அலோசனைகளையும் வழங்கி வைத்தனர். இச்செயலமர்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment