31 Mar 2023

மியானி நகர் மற்றும் சமுத்திரவியல் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை!!

SHARE


LIFT நிறுவனத்தின் ஏற்பாட்டில் HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் "கருத்து வெளிப்பாட்டு உரிமையும், நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப் பாவனையும்" எனும் தலைப்பில் இரண்டு நாட்களை கொண்டமைந்த விழிப்புணர்வுச் செயலமர்வுகள் கடந்த 20, 21,03,2023 திகதிகளில்  நடைபெற்றன. 

இதன் வளவாளர்களாக ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமான ஏ.சதுஜனா, கே.ருத்திரன், பா.டயசிங்கம், எம்.முர்ஷித், அ.ஜனார்த்தனன், ஜெயச்சந்திரிகா, எம்.பாரிஸ், என்.துஜோகாந்த் ஆகியோர் செயற்பட்டனர்.

இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகப் பாவனை அதிகரித்து வரும் இக்காலத்தில், ஊடகதர்மம், ஊடகம் தொடர்பான சட்டங்களைப் பற்றிய தெளிவு இச்செயலமர்வுகள் மூலம் ஏற்படுவதாக இதில் பங்குபற்றிய மாணவர்கள் தெரிவித்தனர். 

இதே போன்றதொரு செயலமர்வு 19, 20 ஆம் திகதிகளில் ஆரையம்பதி RKM வித்தியாலயத்திலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இதன் வளவாளர்களாக ஜனார்த்தனன் மற்றும் நஸ்றியா ஆகியோர் கலந்து கொண்டு வளவாண்மை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: