29 Mar 2023

அட்டாளைச்சேனை அக்டிவ் சிடிசன் குழுவின் ஏற்பாட்டில் சமூக ஒற்றுமை கலந்துரையாடல்.

SHARE

அட்டாளைச்சேனை அக்டிவ் சிடிசன் குழுவின் ஏற்பாட்டில் சமூக ஒற்றுமை கலந்துரையாடல். 

அட்டாளைச்சேனை சக்கி வரவேற்பு மண்டபதில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்ஸில் நிதிப்பங்களிப்புடன் முஸ்லிம் எய்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் மாற்றுவழிப் பிணக்குத் தீர்வு (Alternative Dispute Resolution) எனும் தலைப்பில் சமூகங்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்த்து சமூகப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

SEDR Active Citizens எனும் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ்  செயற்படுத்தப்படும்     "LifeTime Dream" (வாழ்நாள் கனவு )   குழுவின் தலைவர் முஹம்மது பாறுக் நஜித் தலைமையில்  நடைபெற்றது.

இந் நிகழ்சியில் பள்ளிவாயல் தலைவர்கள்,  சமூக  சேவை நிறுவனங்ளின் தலைவர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், இளைஞர்கள் மற்றும் ஓய்வு நிலை அரச அதிகாரிகள் என பலரும்  கலந்துகொண்டனர். இதற்கு சிறப்பு விருந்தினராக  இச்செயற்திட்டத்தின் அம்பாறை மாவட்ட Mentor அஸ்மத்துல்லாஹ் ஹமிது கலந்து சிறப்பித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: