25 Mar 2023

இன, மத நல்லிணக்கம் சார் பேச்சு, சித்திர போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா.

SHARE

இன, மத நல்லிணக்கம் சார் பேச்சு, சித்திர போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா.

இனம் மற்றும் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக றாணமடு உதயசூரியா சகவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் அக்ரெட்  நிறுவனத்தின் அணுசரணையில் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட பேச்சு, சித்திர போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சங்க தலைவி மு.நந்தினி தலைமையில் வெல்லாவெளி றாணமடு பல்தேவைக் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தும் முகமான மாணவர்களுக்கிடையேயான சித்திர, பேச்சு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் அதிதிகளால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் பேச்சு மற்றும் நடனங்கள் நிகழ்வினை அலங்கரித்தது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலாளர் இரா.இராகுலநாயகி மற்றும் உதவி பிரதேச செயலாளர் தூலாஞ்சன், திட்டமிடல் பணிப்பாளர் சசிகுமார், அக்ரெட்  நிறுவனத்தின் பிரதி  திட்ட முகாமையாளர் ஆர்.கஜேந்திரன், கிராம சேவை உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: