மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவுக்கு மருத்துவ பொருட்கள் கையளிப்பு.
வன்னி ஹோப் அவுஸ்திரேலியா மற்றும் IMHO நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவுக்கு மருத்துவ பொருட்கள் வெள்ளிக்கிழமை (17) அன்று கையளிக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள
பொருளாதார பிரச்சினை காரணமாக மருந்து தட்டுப்பாடுகள் பல்வேறு வைத்தியசாலைகளில் நிலவுகின்ற
சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவினால் வன்னி ஹோப்
நிறுவனத்துக்கு விடுத்த விசேட வேண்டுகோளின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மருத்துவ
சாரா பொருட்கள் ஒரு தொகை வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் M.T.M. பாரிஸ்
அவர்களினால் வைத்தியாசாலையின் பணிப்பாளர் கலா ரஞ்சனி கணேசலிங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
ஐக்கிய அமெரிக்க நாட்டில் உள்ள நல்லைய்யா பவுண்டேசனின் நிதி அனுசரணையில் இவ்மருத்துவ மற்றும் மருத்துவ சாரா பொருட்கள் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவிகள் மூலம் புற்றுநோய் பிரிவுக்கு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளுக்கு தங்குதடையின்றி தங்களுடன் சேவைகளை சிறப்பாக செய்ய முடியும் என வைத்தியாசாலையின் பணிப்பாளர் கலா ரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment