8 Feb 2023

தமிழ் மக்களுக்கான விரைவான அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்.

SHARE

தமிழ் மக்களுக்கான விரைவான அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்.  

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புதன்கிழமை(08) இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்

இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவிகளை எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் வழங்க முடியும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், இலங்கைக்கான பிரான்ஸின் துணை தூதுவரும் பங்கேற்றிருந்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: