நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மல்க நல்லடக்கம்.
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாத்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள நான்பது வட்டை குளத்திலிருந்து களுமுந்தன்வெளி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஆசிரியர் ஒருவர் உட்பட 3 மாணவர்களின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(12.02.2023) அன்று மீட்கப்பட்டிருந்தனர்.
அவர்களின் உடல்கள் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மல்க களுமுந்தன்வெளி பொது மயானத்தில் திங்கட்கிழமை(13.02.2023)மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன.
இதன்போது அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
0 Comments:
Post a Comment