வங்கிகளின் பாதுகாப்புக்களைப் பலப்படுத்துவது தொடர்பில் முகாமையாளர்களுக்கு பொலிசார் அறிவுறுத்தல்.
வங்கிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவது தொடர்பில் வங்கி முகாமையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை(06.02.2023) மாலை இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபயவிக்கிரம அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள அரச மற்றும் தனியார் வங்கி முகாமையாளர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பத்திகாரி பொலிஸ் பரிசோதகர் ஜோய் அவர்கள் கலந்து கொண்டு வங்கி முகாமையாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பிலான விளக்கங்களையும், தெழிவூட்டல்களையும் வழங்கினார்.
நாட்டின் பல இடங்களில் அண்மையில் வங்கிகளின் தன்னியக்க பணவைப்பு மற்றும் மீள எடுத்தல் இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன. இந்நிலையில் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திலுள்ள வங்கிகளின் பாதுகாப்புக்களைப் பலப்படுத்த வேண்டும். இதற்கு பொலிசாரின் முழு ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் வங்கி முகாமையாளர்கள் இதில் மிகவு அவதானமாக செயற்பட வேண்டும். மக்கள் பணத்தையும், தங்க ஆபரணங்களையும், வங்கிகளை நம்பியே வைப்பிலிருக்கின்றார்கள். அதனை முறையாக உரிய பாதுகாப்புடன் பேணவேண்டியது வங்கிகளின் கடப்பாடாகும் என இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பத்திகாரி பொலிஸ் பரிசோதகர் ஜோய் தெழிவு படுத்தினார்.
0 Comments:
Post a Comment