மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் சுதந்திர நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையில் நடைம்பெற்ற இந்நிகழ்வின்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு உத்தியோகத்தர்களால் தேசியகீதம் இசைக்கப்பட்டது.
அலுவலக உத்தியோகத்தர்கள் நிகழ்கால பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன் மிகவும் காத்திரமான முறையிலே இனிவரும் காலங்களில் மிகவும் சிறப்பாக கடமையாற்ற வேண்டுமென்பதுடன் ஒரு செயற்திட்டத்தினை ஆரம்பிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயலாற்றாமல் அச்செயற்றிட்டத்தின் வெற்றிகரமான படிநிலைகளை தொடர்ந்தும் கண்காணித்து பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டுமென பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் உரையாற்றினார்.
தொடர்ந்து பிரதேச செயலகத்தில் சிரமதானப் பணி ஒன்றும் முன்நெடுக்கப்பட்டிருந்ததோடு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்குரிய சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment