18 Feb 2023

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் - ஊடக அமைப்புக்கள் கோரிக்ககை.

SHARE

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் - ஊடக அமைப்புக்கள் கோரிக்ககை.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்குமாறு கோரி மட்டக்களப்பு மாட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் சனிக்கிழமை(18.02.2023) மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டடிருந்தனர்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், வடக்கு கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புக்களின் ஒத்தழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உப்பினர் கோ.கருணாகரம், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணவான், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரெரெத்தினம், .பிரசன்னா, மற்றும் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இதன்போது ஜனாதிபதிக்கு வழங்கி வைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

வடக்கு - கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களிற்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாரா இல்லையென தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளை படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளரின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், வடக்கு கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புக்கள், தொடர்ச்சியாக கண்டித்தே வந்துள்ளது.

2000ம் ஆண்டில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுககொலையுடன் அரங்கேறிய ஊடகப்படுகொலைகள் நீண்டே சென்றிருந்தது. தமிழர் தாயகப்பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள்; கைதுசெய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை என்பது அனைவரும் அறிந்ததொரு உண்மையாகும்.

வடக்கு - கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண நாம் தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களிற்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டுமென மீண்டும் நாம்  கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை நல்லாட்சி காலத்தில் தாங்கள் பிரதமராக இருந்த காலப்பகுதியினில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களது குடும்பங்களிற்கு இடைக்கால நிவாரணமாக இழப்பீடு ஒன்றை வழங்க முன்வந்து விசாரணை குழுவொன்றையும் அமைத்திருந்தீர்கள்.

குழுவும் விசாரணைகளை முன்னெடுத்த போதும் ஆட்சி மாற்றத்தின் பின்னராக அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

பின்னராக கோத்தபாயராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவ்வாறு விசாரணைக்குழுவே நியமிக்கப்பட்டிருக்கவில்லையென வாதிடப்பட்டிருந்தது.

எனினும் தற்போது தாங்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைகளின் பிரகாரம் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடகவியலாளர்களது குடும்பங்களிற்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவதில் கவனத்தை செலுத்த கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

















SHARE

Author: verified_user

0 Comments: