10 Feb 2023

மட்டு. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ‘புதிய கிராமம் புதிய நாடு’ வேலைத் திட்டம் ஆரம்பம்.

SHARE

மட்டு. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ‘புதிய கிராமம் புதிய நாடு’  வேலைத் திட்டம் ஆரம்பம். 

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ‘புதிய கிராமம் புதிய நாடு’  எனும் தேசிய ஒருங்கிணைந்த பங்குபற்றல் வேலைத் திட்டம்

புதன்கிழமை  (08 ) பிற்பகல் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தலைமையில் இடம் பெற்றது. கரவெட்டி விளையாட்டு மைதானத்தின் இடம் பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக  அரசாங்க அதிபர் முகுந்தன் நவரூபரஞ்சினி,  உதவி பிரதேச செயலாளர் சுபா.சதாகரன், அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின்  பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜன் தவசீலன்,  இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கலாராணி மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அன்றாடம் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவுக்கு கஸ்டப்படும்.  25 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் மேலும் 25 குடும்பங்களுக்கு அவர்களது போசாக்கு  மட்டத்தை உயர்த்தி, ஆரேக்கியமானதொரு வாழ்கையினை கட்டியெழுப்பும் வகையில் வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இத் திட்டமானது, நாடு முழுவதும் சகல மாவட்டங்களிலும் அரச, தனியார் நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்கள், சமய, சமூக நிறுவனங்கள், நன்கொடையாளர்களுடன் இணைந்து ‘புதிய கிராமம் புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த பங்குபற்றல் வேலைத் திட்டத்திட்டமாக  தேசிய ரீதியில் செயற்பட்டு வருகிறது.

இவ்வருடம் முதல் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு இத் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: