28 Feb 2023

34 வருட அரசசேவையிலிருந்தும் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) பதவியில் இருந்தும் திரு. சிங்கநாயகம் குலதீபன் அவர்கள் 28.02.2023 அதாவது இன்று ஓய்வு பெறுகின்றார்.

SHARE

34 வருட அரசசேவையிலிருந்தும் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) பதவியில் இருந்தும் திரு. சிங்கநாயகம் குலதீபன் அவர்கள் 28.02.2023 அதாவது இன்று ஓய்வு பெறுகின்றார்.

திரு.சிங்கநாயகம் குலதீபன் அவர்கள் தனது 34 வருட அரச சேவையிலிருந்தும் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) பதவியில் இருந்தும் நிகரற்ற சேவைகளை செம்மையாக பூர்த்தி செய்து 28.02.2023 ஆம் திகதி இன்று ஓய்வு பெறுகின்றார். இவர் காவலாள் கண்ணகியும் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரும் கோயில் கொண்ட பதியாம் களுவாஞ்சியூரில் சிங்கநாயகம் சரோஜா அவர்கள் செய்த தவப் பயனால் 02.07.1962 ஆம் ஆண்டு சின்னக் கவுத்தன்குடி மரபில் வந்துதித்தவராவார்.

இவருடைய துணைவியார் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ரட்னாதேவி அவர்களை கரம்பிடித்து இல்லற வாழ்க்கையில் இனிதாய் யதுசிகன் அவர்களை மகனாக ஈன்றெடுத்து அவர் செய்த சேவையின் நிமிர்த்தம் தன்னுடைய மகன் யதுசிகன் அவர்கள் Bsc(Hons) UK, M Res in oncology(Dist)UK, PHD in Cancer Research in Immunology (Reading) USA இவ்வாறு உயர் தகமையைக் கொண்ட மகனை பெற்றெடுத்த பெருமை திரு.சி.குலதீபன் ரெட்னாதேவி அவர்களையே சாரும்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை 1-5 வரை மட் ஃகளுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்திலும் இடைநிலை வகுப்பான 6 7 வரை மட் ஃசிவானந்தா மகா வித்தியாலயத்திலும் 8 தொடக்கம் .பொ. (உஃத) வகுப்பு வரை மட்ஃபட்ஃபட்டிருப்பு .. வித்தியாலயம் தேசியபாடசாலை களுவாஞ்சிகுடியிலும் கற்றுள்ளார். மேலும் இவர் மட் ஃபட் பட்டிருப்பு . வித்தியாலயம் (தே.பா) களுவாஞ்சிகுடியில் தனது .பொ. (உஃத) வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று சித்தியடைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு 1982 முதல் 1986 வரை வியாபார நிர்வாகம் எனும் பட்டத்திற்கான கற்றலை வர்த்தக பீடத்தில் மேற்கொண்டு 2னெ உடயளள ரிpநச iஎளைழைn ர்ழுNளு பட்டத்தை தமதாக்கிக் கொண்டதோடு 2017ஆம் ஆண்டு ருniஎநசளவைல ழக ஊழளவய சுiஉய பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டத்தையும் நிறைவு செய்திருந்தார். மற்றும் தொழில்சார் தகமைகளாக இலங்கை கணக்காளர் சேவை உறப்பினராகவும் இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்ப நிறுவன அங்கத்தவராகவும் இலங்கை பட்டய பொது நிதி நிறுவனத்தின் சிரேஷ்ட அங்கத்தவராகவும் சிறப்பாக செயற்பட்டு கணக்காளர் சேவையில் தடம் பதித்த ஒரு கடமையுணர்வுமிக்க கணக்காளராவார் இவர் ஆரம்பத்தில் ஆசிரியர் நியமனம் பெற்று தான் கற்ற பாடசாலையான மட் பட்டிருப்பு .. வித்தியாலயம் களுவாஞ்சிகுடியில் கடமையாற்றி மாணவச் செல்வங்களுக்கு கற்றல் பணியினை மேற்கொண்டு பல மாணவர்களை வர்த்தகப்பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய பெருமையும் இவரைச் சாந்து நிற்கின்றது.

     பின்னர் கணக்காளர் சேவை தெரிவுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி 1992 ஆம் ஆண்டு முதல் 1996 வரை ஆரயம்பதி பிரதேச செயலகத்திலும் 1996 முதல் 2004 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் கணக்காளராக சிறந்த சேவைகளை வழங்கியிருந்தார். தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை கொழும்பில் சுகாதார அமைச்சில் மருத்துவ வழங்கல் பிரிவில் பிரதிப் பணிப்பாளராகவும் (நிதி விடயங்களுக்கு) கடமையாற்றியதோடு 2013 - 2014 ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சு கொழும்பில் நிதி விடயங்களுக்கு பணிப்பாளராகவும்2014  முதல் 2021 வரை கல்வி அமைச்சில் கல்விவெளியீட்டுத் திணைக்களத்தில் பிரதம கணக்காளராகவும்  கடமையாற்றி இறுதியாக 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 28.02.2023 வரை கிழக்கு மாகாணத்திற்கான பிரதி பிரதம செயலாளர் (நிதி) போன்ற பதவிகளை தனது புலமையினாலும் ஆளுமையினாலும் வகித்திருந்தார். கணக்காளர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு முதல் முதலில் நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற வகையில் மட்டக்களப்பு பிரதேசம் பெருமை கொள்கின்றது. இத்தகைய பெருமைக்குரியவர் திரு. சிங்கநாயகம் குலதீபன் அவர்களே ஆகும்.

     இவர் தனது பதவிக்காலங்களில் பயிற்சிக்காகவும் மாநாடுகளுக்காகவும் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். தனிப்பட்ட விடயமாகவும் புலமை பரிசில் கிடைத்தும் சென்று வந்துள்ளார். அதாவது சென்ற நாடுகளான அமெரிக்கா, கனடா ஐக்கிய இராட்சியம், ஜேர்மனி, கொரியா, ஜப்பான், பிரான்ஸ், டென்மார்க், சுவிடன், சுவிஸ்லாந்து, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளுக்கு சென்று தனது அனுபவங்களை எமது நாட்டில் பல அமைச்சுக்கள், திணைக்களங்களில்  பகிர்ந்துள்ளார்.

     இவர் கல்வி அமைச்சில் கடமை புரிந்த வேளை பல்வேறுபட்ட கல்விச் சேவைகளை சளைக்காமல் செய்து முடித்துள்ளார். தான் கற்ற பாடசாலைக்கு அதாவது மட் ஃபட் ஃபட்டிருப்பு .மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் பாரிய கட்டிட நிர்மாணங்களையும் ஆளனி பௌதீக வளங்கள் என பல அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளார் அதாவது ஆரம்பப்பிரிவு மூன்றுமாடி கட்டடம் நவீன முறையில் நிர்மாணித்துள்ள விளையாட்டரங்கம் மற்றும் விளையாட்டு மைதானம் சுற்றிவரவுள்ள மதில்கள் மற்றும் கட்டிட திருத்த வேலைகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் மற்றும் .பொ. (உஃத) தொழில் நுட்ப பிரிவினை உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெற்றுத்தந்தமை மற்றும் அதற்கான ஆசிரியர்கள் ஏனைய ஆசிரியர் வளங்களையம் வழங்குவதற்கு உரிய அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நிறைவேற்றியுள்ளார். இச் சேவை யாராலும் என்றும் எப்போதும் மறக்கவே முடியாது இவருக்கு உறுதுணையாக நின்று தேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய அக்காலப்பகுதியில் மேற்படி பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றிய திரு. நாராயணபிள்ளை நாகேந்திரன் ஆகிய நான் அவர்களோடு பூரண ஒத்துழைப்புக்களை நல்கியிருந்;தமை குறிப்பிடத்தக்கவையாகும்.

     சிங்கநாயகம் குலதீபன் அவர்கள் தான் கற்ற ஆரம்ப பாடசாலையான மட்ஃகளுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அடிக்கடி வழங்கியதுடன் ஒன்று கூடல் மண்டபத்திற்கும் நிதியினை பெற்றுக்கொடுத்திருந்தார். இவற்றுடன் களுவாஞ்சிகுடி விநாயர் வித்தியாலயத்திலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கியமை தனது தந்தை ஆசிரியராக இருந்து செய்த மகத்தான சேவையின் பால் வெளிப்படுகின்றது. இவை மட்டுமல்ல பல்வேறு சமூக சமய சுகாதார சேவைகளையும் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் ஆலயங்களுக்கும் புரிந்துள்ளார்.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் மூலம் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்விக்காக கற்றல் உபகரணங்களை அதிகமாக மாணவர்களுக்கு வழங்கியதுடன் வைத்தியசாலை சேவைகளையும் ஒழுங்குபடுத்திக் கொடுத்திருந்தார்.  மற்றும் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயங்களின் புணர்த்தான வேலைகளுக்கு நிதிகளையும் வழங்கி ஆலய பரிபாலனசபையினருக்கு ஒத்துழைப்புகளையும் நல்கியுள்ளார். எனவே இவருடைய இத்தகைய சேவைகளை என்றுமே அளவிட்டுக் கூறமுடியாது. அவர் செய்த பணிகளின் மகத்துவத்தை சேவையில் இருந்து ஓய்வு பெற்றாலும்; மக்கள் மனதிலும், அதிகாரிகள் மனதிலும் மாணவர்கள் மனதிலும் என்றுமே நீங்காதவையாகவே தடம் பதிக்கும். இவருடைய ஓய்வுக் காலங்களில் மனைவி மகனோடு சீரும் சிறப்புமாக எந்த வித நோய் நொடிகள் இன்றி பல்லாண்டுகாலம் ஆல் போல் தளைத்து அறுகதுபோல் வேர் ஊன்றி மூங்கில் போல் சுற்றும் முகியாமல் வாழ்வீரே என வாழ்த்துகின்றேன்.

 

கலாநிதி கலைச்சுடர், இலக்கிய வித்தகர்

நாராயணபிள்ளை நாகேந்திரன் (JP)

ஓய்வு நிலை அதிபர்

களுவாஞ்சிகுடி




SHARE

Author: verified_user

0 Comments: