11 Jan 2023

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் அறிவித்தல்.

SHARE

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் அறிவித்தல்.  

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் மட்டக்களப்பு, ஏறாவூர், வாழைச்சேனை மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களுக்கான அறிவித்தல் ஒன்றை அவ்ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ..லோகநாதக் குருக்கள் புதன்கிழமை(11.01.2023) விடுத்துள்ளார்.

எதிர்வரும் சில தினங்களுக்குள் செங்கலடிப் பிரதேசத்தில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தினால் மற்றுமொரு வேத சிவாகம பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதில் மட்டக்களப்பு, ஏறாவூர் வாழைச்சேனை மற்றும் கிரான் ஆகிய பிரதேசக் கிளைகளிலுள்ள இந்துக்குருமார்கள் கலந்து கொண்டு பயிற்சிகளைப் பெறலாம்.

இப்பாடசாலையில் வேதகம், ஆகமம், பூஜை, முறைகள், யோகாசனம், மற்றும் சங்கீதம், போன்ற பயிற்சிகள் உள்ளிட்ட கல்விகளும், போதிக்கப்படவுள்ளன. எனவே எதிர்வரும் பொங்கல் தினத்திங்கு முன்பாக இதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ள காரணத்தினால் மேற்குறித்த பிரதேசங்களிலுள்ள இந்துக் குருமார்கள் தங்களை செங்கலடி பிரதேசங்கிளையின் தலைவர் சிவஸ்ரீ.சுமணன் குருக்களிடம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

கிழக்கிலங்கையிலுள்ள இந்துக்குருமாரின் வசதிகருதியும், அவர்களது வளர்ச்சிகள் மேலோங்கவேண்டியும், வேதம், ஆகமம், போன்றவற்றை முன்நெடுத்துச் செல்வதற்கும், பூஜை முறைகளை மேலும் சிறப்பான முறையில் கற்றுத் தேறவும், குரமார்களை வளர்த்தெடுக்கின்ற நோக்கிலேயே தம்மால் இரண்டாவது வேத சிவாகம பாடசாலை செங்கலடியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே அனைத்து குருமாரும் கலந்து கற்றுக் கொண்டு சிறந்த குருமாராக விளங்குவதற்கு முன்வருமாறும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின தலைவர் சிவஸ்ரீ..லோகநாதக் குருக்கள் மேலும் தெரிவித்துள்ளார்.






SHARE

Author: verified_user

0 Comments: