கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தால் இரண்டாவது வேத சிவாகம பாடசாலை ஆரம்பித்து வைப்பு.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது வேத சிவாகம பாடசாலை மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசக் கிளையில் புதன்கிழமை(18.01.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் சிவ.ஸ்ரீ.கணேச.லோகநாதக் குருக்கள் தெரிவித்தார்.
வவுணதீவுப் பிரதேசத்தை மையப்படுத்தி அப்பகுதியிலுள்ள இந்து குருமாரை நன்கு பயிற்றுவிப்பதற்காக வேண்டி அப்பகுதியில் அமைந்துள்ள இறக்கத்துமுனை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் இந்த வேத சிவாகம பயிற்சிப் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் வேதகம், ஆகமம், பூஜை, முறைகள், யோகாசனம், மற்றும் சங்கீதம், போன்ற பயிற்சிகள் உள்ளிட்ட கல்விகளும், போதிக்கப்படவுள்ளன.
கிழக்கிலங்கையிலுள்ள இந்துக்குருமாரின் வசதிகருதியும், அவர்களது வளற்சிகள் மேலோங்க வேண்டியும், வேதம், ஆகமம், போன்றவற்றை முன்நெடுத்துச் செல்வதற்கும், பூஜை முறைகளை மேலும் சிறப்பான முறையில் கற்றுத் தேறவும், குருமார்களை வளர்த்தெடுக்கின்ற நோக்கிலேயே தம்மால் இரண்டாவது வேத சிவாகம பாடசாலையாக வவுணதீவில் இது தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது. அப்பகுதியிலுள்ள குருமார்கள் கலந்து கற்றுக் கொண்டு சிறந்த குருமாராக விளங்குவதற்கு முன்வந்துள்ளதாக கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின தலைவர் சிவஸ்ரீ.க.லோகநாதக் குருக்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்வமைப்பின் வவுணதீவு பிரதேசக் கிளையின் தலைவர் சிவ.ஸ்ரீ.முரசொழிமாறக் குருக்கள், மற்றும் 30 இற்கு மேற்பட்ட வேத சிவாகமங்களைக் கற்கும் குருமார்கள், உள்ளிட்ட கலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment