களுதாவளை மகாவித்தியாலயம்(தேசிய பாடசாலை)யின் சாதனையாளர் பாராட்டு விழா.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குபட்பட்ட களுதாவளை மகாவித்தியாலயம்(தேசிய பாடசாலை)யின் சாதனையாளர் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(29.01.2023) பாடசாலையின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் கே.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்ற இச்சாதனையாளர் பாராட்டு விழாவில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி.ரி.ராஜசேகர், திருமதி.ஜே.பிரியதர்சன், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான என்.நேசகஜேந்திரன், ரி.இதயகுமார். உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இதன்போது பாடசலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளர், கிராம பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கல்வி, விளையாட்டு, உள்ளிட்ட ஏனைய இணைபாட விதான செயற்பாடுகளின் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் நினைவுச் சின்னங்களும், பதக்கங்களும், வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment