இலங்கை தமிழரசுக் கட்டசியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில்.
இலங்கை தமிழசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை(07) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இல்லத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன் இரா.சாணக்கியன், த.கலையரசன்,
உட்பட வடக்கு கிழக்கிலுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற
, மாகாண சபை உறுப்பினர், உள்ளூராட்சி சபைகளின்
தலைவர்கள்கட்சியின் இளைஞர் அணியினர் உட்பட
கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கட்சியின் கொடியை தலைவர் மாவை சேனாதிராசா ஏற்றியதைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.இராசமாணிக்கத்தின் சிலைக்கு மலர்மாலை அணிவித்ததை அடுத்து அக வணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் மத்திய செயற்குழுக் கூட்டம் ஆரம்பமானது. கூட்டம் நடைபெறுகின்றவேளை மண்டபத்திற்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
0 Comments:
Post a Comment