10 Jan 2023

மட்.செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கணணி ஆய்வுகூட திறப்பு விழா.

SHARE

மட்.செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கணணி ஆய்வுகூட திறப்பு விழா.

கல்குடா கல்வி வலயத்துக்கு உட்பட்ட மட்.செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் கணணி ஆய்வுகூட திறப்பு விழா அண்மையில் பாடசாலையின் அதிபர் கே.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது கல்குடா  வலய கல்விப்பணிப்பாளர் தி.ரவி, பிரதிக் கல்வி பணிப்பாளர்(திட்டமிடல்) எஸ்.துஷ்யந்தன் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் ஆலோசகர் குலேந்திரகுமார், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும், கலந்து கொண்டிருந்தனர்.

வலயக்கல்வி அலுவலகத்தின் திருத்த வேலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில்  பாடசாலை வகுப்பறை திருத்தி அமைக்கப்பட்டு கணணி ஆய்வுகூடமாக மாற்றப்பட்டது. மேலும்  இக்கணணி ஆய்வு கூடத்தில் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் ஸ்மார்ட் போர்ட் என்பன  கற்றல், கற்பித்தல் சாதனங்களாக காணப்படுவது சிறப்பம்சமாகும்.

















SHARE

Author: verified_user

0 Comments: