6 Jan 2023

மனித வியாபாரம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு.

SHARE

மனித வியாபாரம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு.

நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் பற்றிய சூழமைவில் கடல் வழியாக ஆட்கடத்தல், மனித வியாபாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை அமைப்பின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்றது.

நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு எதிரான அமைப்பு, சமூக மேம்பாட்டு சேவைகள் அமைப்பு, மற்றும்  கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை அமைப்பு ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு இக்கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

இதன்போது கடல்வழியாக ஆட்கடத்தல், புலம்பெயர்தல் போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள், சட்டரீதியற்ற கடல் பயணங்கள், தொடர்பிலும், இவை தொடர்பான சட்டதிட்டங்கள் தொடர்பிலும், ஊடகவியலாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன. 

கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி உதயேந்திரன், மற்றும் சிரேஸ்ட்ட வெளிக்கள உத்தியோகஸ்த்தர் ஜெயசாந்தி ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களையும். விளக்கங்களையும் வழங்கினர்.
















SHARE

Author: verified_user

0 Comments: