9 Jan 2023

மட்டு.பாராளுமன்ற உறுப்பினரொருவரின் சகோதரர் சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றார் - சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு.

SHARE

மட்டு.பாராளுமன்ற உறுப்பினரொருவரின் சகோதரர் சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றார் - சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு.

மாட்டத்திலுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரரான சிவனேசதுரை அகிலகுமார் என்பவர் சட்டவிரோதமான ஆட்கடத்திலில் ஈடுபடுவதாக அஸ்ரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குத் தெரியும். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கனடா தமிழ் பவுண்டேசனின் ஆனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்திலீருந்து தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு எதிர் வரும் தைப் பொங்கலுக்குரிய பொருட்கள், மற்றும் புத்தாடைகள் வழங்கி வைக்கும் நிகழ்வும், சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும், ஞாயிற்றுக்கிழமை(08.01.2023) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் அவ்வமைபின் கிழக்கு மாகாண அமைப்பாளர் எஸ்.விஸ்வராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வது முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும். இது தற்போது பாரியதொரு பிரச்சனையாகவும் மாறியிருக்கின்றது. சில கிராமங்களில் இளைஞர்களைத் தேடி எடுக்க முடியாத நிலமையும் உள்ளது. சட்ட ரீதியான முறையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று தமது வாழ்வை முன்னெடுக்கின்ற நிலையில், இன்னும் சிலர் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பல முகவர்களை நம்பி கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்கின்றார்கள். இனால் பலர் தமது வீடு வளவுகளையும் விற்கின்றார்கள். இந்நிலையில் படகில் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்பில் எமது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் சென்றால் மீண்டும் அவர்களுது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவோம் என அவுஸ்ரோலிய அரசாங்கம் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு படகில் பயணம் செய்து பலர் உயிரிழந்த சம்பவங்களும் இருக்கின்றன. இவ்வாறான விடைங்களில் ஈடுபடுவதை எமது மக்கள் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

.பி.சி டொற் நெற் என அழைக்கப்படும் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று கடந்த 2022.செப்டம்பர்.22 ஆம் திகதி அன்று மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரரான சிவனேசதுரை அகிலகுமார் என்பவர் சட்டவிரோதமான ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குத் தெரியும். இது பொய்இல்லை இது தொடர்பில் பொய் சொல்ல முடியாது பொய் என்றால் எனக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுங்கள்.

எமது மக்களைப் பாதுக்காக்க வேண்டும், என்பதங்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிப் பயணிக்கின்றோம். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் சிவனேசதுரை அகிலகுமார் போன்றோர் சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வருகின்றர். இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அவமானமாகும்.

எதிர்வரும் காலத்திலே ஒரு தேர்தல் நடைபெறப் போகின்றது. கடந்த காலங்களில் எமது மக்களை வீடு தருவோம், வீதி தருவோம் என ஏமாற்றினார்கள். ஆனாலும் எமது மக்கள் இன்னும் வறுமையாகத்தான் உள்ளார்கள். விவசாயிகளுக்கு உரம், எரிபொருள், இல்லாமல்போனது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எனவே எதிர்வரும் காலத்தில் வருகின்ற தேர்தலில் வேட்பாளர் யாராக இருந்தாலும் வீட்டுச் சின்னத்திற்கு எமது மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

















SHARE

Author: verified_user

0 Comments: