மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காட்டித் தந்த எண்கோணேஸ்வரர் அறநெறிப்பாடசலைக்கு வன்னிக்ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தினால் இசைக்கருவிகள் ஞாயிற்றுக்கிழமை(08.01.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
60 மாணவர்களும், 6 ஆசிரியர்களும் உள்ள அந்த அறநெறிப் பாடசாலைக்கு இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வில் வன்னிஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சீ.லவகுமாரி(றேகா) கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தார்.
பல வருடகாலமாக இசைக்கருவிகள் இல்லாமல் பஜனைகள், போட்டிகளுக்கு தம்மால் சமூகமளிக்க முடியாதிருந்தன. தற்போது இந்த இசைக்கருவிகள் கிடைத்தது தமக்குரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதற்காக வேண்டி வன்னிஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்திற்கு எமது உளமர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த ஆசிரியர்களும். மாணவர்களும் இதன்போது தெரிவித்தனர். இதன்போது மாணவர்களின், நடனம், குழுநடனம், திருக்குறள் பேச்சு, என்பன இடம் பெற்றமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment