கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு.
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள யேசு உன்னை ஜீவிக்கிறார் ஆலயத்தில் வைத்து மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும், இனிப்பு பண்டங்களும் ஞாயிற்றுக்கிழமை (25) வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் அவரது சொந்த நிதியிலிருந் இந்த உதவிகளை வழங்கி வைத்தார்.
இதன்போது ஓந்தாச்சிமடம்யேசு உன்னை ஜீவிக்கிறார் ஆலயத்தின் போதகர் பிரான்சிஸ் றசிகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment